தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி- பரபரப்பு

ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா போலீசாரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-24 10:56 GMT

ஐதராபாத்,

தெலுங்கனாவில் அரசுப் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் டிஎஸ்.பி.எஸ்சி தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்குழுவிடம் சில ஆவணங்களை காட்ட ஒய்.எஸ்.ஆர் தெலுங்கா கட்சியின் தலைவரும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ் ஷர்மிளா சென்றார்.

ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த ஷர்மிளா, பெண் போலீசாரை தாக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச்சென்றனர். 

மேலும் செய்திகள்