முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2023-02-28 15:47 GMT

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாடும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவீட்டரில் பதிவிட்ட வாழ்த்துச்செய்தியில்.. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

மக்களுக்கு "தி"னமும் "மு"ழு உடல் நலத்துடன் "க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்