நான் இளமையாக இருப்பது எப்படி...!பெண்களிடையே பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி

நான் இளமையாக தோன்றுவது எப்படி என்பது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் கர்ப்பிணி பெண்களிடையே பேசினார்.

Update: 2023-02-21 10:24 GMT

நிஜமாபாத்

மூத்த ஐஏஎஸ், தெலுங்கானா முதல் மந்திரி அலுவலக அதிகாரி ஸ்மிதா சபர்வால் நிஜாமாபாத் சுற்றுலா சென்றார். அங்கு கமரெட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களை சந்தித்தார். குடும்ப நலத்துறை செயலாளர் ஸ்வேதா மஹந்தியுடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்மிதா சபர்வால் தனது வயது குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.

சுகாதாரத்தை பேணுவது குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கினார். தாய் நலமாக இருந்தால் தான் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்

கர்ப்பிணிப் பெண்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது:-

தாயாக இருப்பது கடவுள் கொடுத்த வரம். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் உங்கள் கையில். நீங்கள் தாயானவுடன் அனைத்தையும் மறந்து விடுகிறீர்கள். எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் இளமையாக தோன்றுவதாக நினைக்கிறீர்கள்.. ஆனால் நான் இளமையாக இல்லை. உங்கள் எல்லோரையும் விட எனக்கு இரண்டு மடங்கு வயதாகிறது.என் மகனுக்கு இப்போது 18 வயது. நான் அம்மா ஹார்லிக்ஸ் குடித்தேன்.நான் பேரிச்சம்பழம் சாப்பிட்டேன்.அம்மா கொடுத்ததை எல்லாம் சாப்பிட்டேன்.நல்ல உணவு சாப்பிட்டால குழந்தைகளை கவனித்துக்கொள்ளலாம்.

வேலைக்குப் போய் என் கடமையைச் செய்ய அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் முதலில் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்