தெலுங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதரபாத்,
தெலங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலை என உறுதி செய்துள்ளனர்.
ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் உடல் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடல் பிரேத பரிசோதனைக்காக (பிஎம்இ) உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் கடந்த சில நாட்களாக தனது பென்ட்ஹவுஸில் தங்கியிருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.