திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தற்கொலை

ராமநகரில், திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-11 20:37 GMT

ராமநகர்: 

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா பைராபட்டணா கிராமத்தை சேர்ந்தவர் சரத் (வயது 27). இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்திருந்தது. திருமணமான புதிது என்பதால் தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். சமீபமாக சரத் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சரத் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த அவரது மனைவி திரும்பி வந்த போது கணவர் சரத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சரத் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னபட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்