17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியர்
17 வயது சிறுமியை டியூசன் ஆசிரியர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பைரா பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி அதே பகுதியை டியூசன் வகுப்பிற்கு சேர்ந்துள்ளார். நிதீஷ் குமார் என்ற டியூசன் ஆசிரியர் மாணவிக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 7-ம் தேதி சிறுமியை டியூசன் ஆசிரியர் நிதீஷ் குமார் கடத்தி சென்றார். பின்னர், அந்த சிறுமியை டியூசன் ஆசிரியர் நிதீஷ் குமார் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியர் நிதீஷ் குமாரை கைது செய்தனர்.