வரி வசூல் நல்ல நிலையில் உள்ளது

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் வரி வசூல் நல்ல நிலையில் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-01-29 20:25 GMT

பெங்களூரு:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பொருளாதார நிலை

கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சியில் வேகம் அதிகரித்துள்ளது. நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, வரி வசூல் ரூ.5 ஆயிரம் கோடி குறைவாக இருந்தது. தற்போது கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடி வசூலித்துள்ளோம். இந்த ஆண்டு ரூ.72 ஆயிரம் கோடி கடன் வாங்க முடிவு செய்தோம். ஆனால் ரூ.61 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்கியுள்ளோம். கடன் அளவையும் குறைத்துள்ளோம்.

நடப்பு ஆண்டில் வரி வசூல் நல்ல நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளால் வாங்கப்பட்ட கடனை அடைக்கும் பொறுப்பு எங்கள் மீது உள்ளது. கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கொரோனாவுக்கு பிறகு பொருளாதார நிலை நன்றாக உள்ளது.

வகுப்பறை கட்டிடங்கள்

இதன் மூலம் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களையும் முன்னிலைக்கு அழைத்து வர வேண்டும். இதற்கான திட்டங்களை செயல்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கர்நாடகத்தில் தற்போது 8,101 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறன்றன. இந்த பணிகள் வருகிற ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்.

வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் மீது சட்டசபை தேர்தலின் தாக்கம் இருக்கும். உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் வட கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை அதிகரித்துள்ளது. இந்த வட கர்நாடகத்தில் இந்த முறை பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்