இந்தியா- அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு, பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளான ஆண்டனி பிளிங்கன் மற்றும் லாயுட் ஆஸ்டின் இருவரும் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.