நடத்தையில் சந்தேகம்.. மனைவி கழுதறுத்து கொலை, 3 வயது குழந்தை கவலைக்கிடம் - கணவன் வெறிச்செயல்

ஜாவேத் தனது குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, தானும் அதேபோல் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Update: 2024-02-16 12:52 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவேத். இவரது மனைவி சப்ரீன். இவர்களுக்கு 3 வயதில் ஹிபா என்ற பெண் குழந்தை உள்ளது. ஜாவேத் தனது மனைவி சப்ரீனை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த சப்ரீன், 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி சப்ரீனின் நடத்தையில் ஜாவேத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஜாவேத், பிளேடைக் கொண்டு சப்ரீனின் கழுத்தை அறுத்துள்ளார்.

மேலும் ஜாவேத், தனது 3 வயது குழந்தையின் கழுத்தையும் பிளேடால் அறுத்துவிட்டு, தானும் அதேபோல் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சப்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜாவேத் மற்றும் 3 வயது குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது ஜாவேத் மற்றும் 3 வயது குழந்தை ஹிபா ஆகியோர் டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்