நடத்தையில் சந்தேகம்: சிறையில் இருந்து ஜாமினில் எடுத்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

குற்ற வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட கணவரை கடந்த 15 நாட்களுக்கு முன் மனைவி ஜாமினில் வெளியே எடுத்தார்.

Update: 2023-06-12 14:48 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பெரெலி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபால் (வயது 40). இவரது மனைவி பூஜா (வயது 32). 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பூஜா அழகுநிலையம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே, குற்ற சம்பவத்தில் கிருஷ்ணபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பூஜா கடந்த 15 நாட்களுக்கு முன் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே எடுத்தார். அதேவேளை, மனைவி பூஜாவின் நடத்தையில் கிருஷ்ணபாலுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை புஜா தனது ஆண் நண்பர் முன்னா என்பவருடன் பெரெலி சந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணபால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி பூஜா மற்றும் அவரது முன்னா மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பூஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூஜாவின் நண்பர் முன்னா படுகாயமடைந்தார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்திய கிருஷ்ணபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.      

Tags:    

மேலும் செய்திகள்