மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்திய நிபுணர் நியமனம்

மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தியவருமான கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-09-04 00:00 GMT

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்-மந்திரி பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மெய்தி மற்றும் குக்கி பழங்குடியினர் சமூகத்தினரிடையே மே 3ல் மோதல் வெடித்து கலவரம் ஏற்பட்டது.

இதற்கு அடுத்த நாள் குக்கி பிரிவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களாக நீடித்த கலவரத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 160 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் மானபங்கம்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கி போனது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மணிப்பூர் உள்துறை இணைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், 'மிகவும் சவாலான சூழ்நிலையில் துல்லியமான திட்டமிடல், முன்மாதிரியான துணிச்சல், தைரியமான நடவடிக்கையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்' என கூறப்பட்டுள்ளது. கர்னல் நெக்டர் சஞ்சன்பாம், 2015ல் நம் அண்டை நாடான மியான்மரில் நடந்த ராணுவ படையின் துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிகல் ஸ்டிரைக்கை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்