மயக்க மருந்து கொடுக்காமல் 24 பெண்களுக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை...!

மயக்க மருந்து கொடுக்காமல் 24 பெண்களுக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ததால் ம்ருத்துவமனையே அலறலால் அல்லோகலப்பட்டது

Update: 2022-11-17 08:17 GMT

பாட்னா:

பீகார் மாநிலம் ககாரியாவில் உள்ள இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இல்லாமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதனால் பெண்கள் அலறி துடித்து உள்ளனர்.

இது குறித்து பெண்கள் புகார் அளித்து உள்ளனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட குமாரி பிரதிமா கூறும் போது நான் வலியால் அலறியனேன். நான்கு பேர் என் கைகளையும் கால்களையும் இறுக்கமாகப் பிடித்து கொண்டனர்.

மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் எனக்கு மயக்கம் ஏற்பட்டது என கூறினார்.

மற்றொரு பெண், அறுவை சிகிச்சை முழுவதும் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறினார். பிளேடு என் உடலை கிழித்த போது நான் கடுமையான வலியை உணர்ந்தேன் என்று கூறினார்.

அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமர்நாத் ஜா, இரண்டு சுகாதார மையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறினார்.

பர்பட்டா சுகாதார மைய பொறுப்பாளர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன், கூறும் போது மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் சில பெண்களுக்கு அது வேலை செய்யவில்லை. "ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது, ஆனால் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பு இருப்பதால் அது பயனுள்ளதாக இல்லை என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்