அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-03 08:55 GMT

புதுடெல்லி,

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீது நடத்தப்பட்ட விசாரணை முடிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்