காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-08-22 12:52 GMT

புதுடெல்லி,

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,

ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார்.

அப்போது முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெற செய்ய நேற்று மீண்டும் முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மனுவை அவசரமாக விசாரிக்க கோரி  முறையிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள  புதிய அமர்வு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தசுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் . நரசிம்மா , பி.கே.மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 25 தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்