1½ வயது குழந்தையை கொன்று பெண் தற்கொலை

கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-22 21:29 GMT

பெலகாவி:

பெலகாவி அருகே காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசவந்தமுரி கிராமத்தில் வசித்து வந்தவர் ஹோலப்பா மாருதி (வயது 25). இவரது மனைவி வசந்தி (22). இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஹோலப்பா தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து வசந்தியிடம் தகராறு செய்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஹோலப்பா, வசந்தியிடம் தகராறு செய்தார். அப்போது தகராறு முற்றவே ஹோலப்பாவை, வசந்தி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஹோலப்பா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் வசந்தி மனம் உடைந்தார். பின்னர் குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய வசந்தி முடிவு செய்தார். அதன்படி 1½ வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற வசந்தி பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் காகதி போலீசார் வசந்தி, குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முன்னதாக ஹோலப்பாவின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து காகதி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்