தீராத வயிற்று வலியால் அவதி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-09 18:45 GMT

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. மாதேஷ் அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

மேலும் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மாதேஷ் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாதேஷ், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்