கடன் தொல்லையால் அவதி; தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

நவலகுந்து அருகே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-28 15:23 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா புறநகர் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 48). விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் விவசாயம் செய்வதற்காக பல்வேறு வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று இருந்தார். அவரால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே வங்கி அதிகாரிகள் பசவராஜுக்கு கடனை திருப்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் பசவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நவலகுந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்