கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-19 18:45 GMT

வி.வி.புரம்:

கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6-வது மாடியில் இருந்து...

பெங்களூருவை சேர்ந்தவர் வாணி(வயது 23). இவர் விஸ்வேஷ்வரபுரா கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது அவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி தொடங்கி 2 மாதங்கள் ஆன நிலையில் தினமும் அவர் கல்லூரிக்கு தவறாமல் சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் கல்லூரிக்கு வராமல் இருந்தார். இதற்கிடையே அவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டிடத்தின் 6-வது மாடிக்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து வி.வி.புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

அவர்கள் சோதனை செய்தபோது மாணவி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் போலீசிடம் கூறியது.

அவர் எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என முதலில் தெரியவில்லை. காதல் தோல்வியா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்