கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் புத்தகங்கள் இன்றி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புத்தக பை இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-10-30 21:32 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புத்தக பை இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாதத்தில் ஒரு சனிக்கிழமை

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று புத்தக பை இன்றி வர வேணடும் என்று கடந்த 2019-ம் ஆண்டே பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த திட்டம் அரசு பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது கொரோனா பிரச்சினை இல்லாததால் பள்ளிகள் எப்போதும் போல் நடந்து வருகிறது.

மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு தவறாமல் வருகை தருகின்றனர். இதையடுத்து, கர்நாடகத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு இருந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் புத்தக பை இன்றி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை பள்ளி கல்வித்துறை மீண்டும் அமல்படுத்தி இருக்கிறது.

புத்தக பை இல்லாமல்...

இதற்கான சுற்றறிக்கையையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது 'சம்பிரம சனிக்கிழமை' என்று இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் மாணவ, மாணவிகள் புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். அன்றயை தினம் மாணவ, மாணவிகளை பன்முக செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம், குடிமை உணர்வை வளர்ப்பதே முக்கிய நோக்குமாகும்.

இதுதவிர சுயவிளக்க பாட புத்தகங்களுடன் 10 முக்கிய விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். புத்தக பை இல்லாமல் சனிக்கிழமையில் எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்