பைக் டாக்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தம்

பெங்களூருவில் டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடாததால் பொதமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2023-03-20 18:45 GMT

பெங்களூரு:-

தடை விதிக்கவில்லை

பெங்களூருவில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இங்கு ரேபிடோ நிறுவனம், பைக் டாக்சியை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை பலகையுடன் கூடிய பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனங்கள் இந்த பைக் டாக்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் ரேபிடோ பைக் டாக்சி சேவைக்கு அரசு தடை விதிக்கவில்லை.

இந்த நிலையில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு 21 ஆட்டோ டிரைவர்கள்

சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன்படி நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்று இரவு 12 மணி வரை ஒரு நாள் முழுவதும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. சில ஆட்டோக்கள் இயங்கின.

கடும் வாக்குவாதம்

அந்த ஆட்டோக்களை ஆட்டோ டிரைவா் சங்க நிர்வாகிகள் தடுத்தி நிறுத்தி அவர்களை கண்டித்தனர். மேலும் ரோட்டோரமாக ஆட்டோக்களை நிறுத்தி அவற்றை இயங்க விடாமல் செய்தனர். ஒரு சில ரோடுகளில் ஓடிய ஆட்டோக்களை தடுத்து அதன் டிரைவர்களுடன் சங்க நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோடுகளில் சிறிது வாகன நெரிசலும் உண்டானது. இதனால் அந்த ஆட்டோக்களில் சவாரி செய்த பயணிகளை அதே இடத்தில் இறக்கிவிட்டனர். இத்தகைய நிகழ்வுகள் நகரின் பல இடங்களில் நடைபெற்றது.

மேலும் ஆட்டோ டிரைவர்கள் முதல்-மந்திரி வீட்ைட முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை சுதந்திர பூங்கா அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் அவதி

ஆட்டோ டிரைவர்களின் வேைல நிறுத்தத்தால் பெங்களூருவில் ஆட்டோக்கள் முழுமையான அளவில் இயங்காததால், பொதுமக்கள் அவதியுற்றனர். இதனால் மக்கள் அவர தேவைகளுக்காக ஓலா, ஊபர் டாக்சிக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மொத்தத்தில் ஆட்டோ வேலை நிறுத்தத்திற்கு பெரும்பகுதி ஆட்டோ டிரைவர்கள் ஆதரவு தெரிவித்ததால், அது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்