பேத்தமங்களா ஏரியில் இருந்து கோலார் தங்கவயலுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேத்தமங்களா ஏரியில் இருந்து கோலார் தங்கவயலுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-21 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் பேத்தமங்களா ஏரியில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்கப்பட்டு வந்தது. தங்கச்சுரங்கம் மூடியபின் குடிநீர் வினியோகிப்பது கடந்த 2002-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதனால் தங்கவயலை சேர்ந்த பெண்கள் தனியார் டேங்கர்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ரூ.3 கொடுத்து ஒரு குடம் தண்ணீரை வாங்குகிறார்கள். பேத்தமங்களா ஏரியில் இருந்து குடிநீர் வினியோகிக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது தொடர் கனமழை காரணமாக பேத்தமங்களா ஏரி நிரம்பியுள்ளது. ஆனால் பேத்தமங்களா ஏரியில் சேகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தாததால் பாலாறு மார்க்கமாக தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு வீனாக செல்வதாக கூறபப்டுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் பேத்தமங்களா ஏரியில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து கோலார் தங்கவயல் மக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்