கத்தியால் குத்தி வாலிபர் கொலை
கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது நண்பர்கள் சோமேகவுடா (வயது 36) மற்றும் ஹரீஸ். இவர்கள், பெங்களூரு கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஓட்டலை முத்துராஜ் நிர்வகித்து வந்தார். மற்ற 2 பேரும் அவ்வப்போது ஓட்டலுக்கு வந்து கணக்கு வழக்குகளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஹரீஸ் மற்றும் சோமேகவுடா ஆகிய 2 பேருக்கும், முத்துராஜிக்கும் ஓட்டல் கணக்கு வழக்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ்,
சோமேகவுடாவை ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து குத்தினார். இதில் சோமேகவுடா படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கும்பலகோடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கத்தியால் குத்தி
வாலிபர் கொலை