எஸ்.ஆர்.சீனிவாஸ் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா

ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சீனிவாஸ் எம்.எல்.ஏ. தீடீரென்று ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-03-27 22:09 GMT

பெங்களூரு:-

2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர், எஸ்.ஆர்.சீனிவாஸ். ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒதுங்கி இருந்து வருகிறார். சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அவர் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து எஸ்.ஆர்.சீனிவாஸ் தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பெங்களூரு விதான சவுதாவில் சபாநாயகர் காகேரியை நேரில் சந்தித்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவால் எந்த மாற்றமோ அல்லது அரசியலில் பரபரப்போ ஏற்பட போவது இல்லை. சட்டசபையின் பதவி காலம் நிறைவடைவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. கட்சி மாற உள்ளதால் சம்பிரதாயப்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்