திருப்பதியில் வசந்த உற்சவம்! - பால், தயிர், தேனால் சிறப்பு திருமஞ்சனம் -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் நடைபெற்ற வருடாந்திர வசந்த உற்சவத்தின் கடைசி நாள் சிறப்பு திருமஞ்சனத்தில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Update: 2023-04-06 01:16 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தின் கடைசி நாள் சிறப்பு திருமஞ்சனத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருடாந்திர வசந்த உற்சவம் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கியது.

இதன் கடைசி நாளில் சீதா, ராமர், லஷ்மணர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு சென்றனர். அங்கு, அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, வசந்த உற்சவம் நிறைவடைந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்