கவுகாத்தி-கொல்கத்தா இடையேயான சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு..!
கவுகாத்தி-கொல்கத்தா இடையேயான சிறப்பு ரெயில் சேவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கவுகாத்தி-கொல்கத்தா சிறப்பு ரெயில் சேவையைத் தொடர கிழக்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, கவுகாத்தி-கொல்கத்தா சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி வரை வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு கவுகாத்தியில் இருந்து இந்த ரெயில் புறப்படுகிறது. முறையே வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தாவை வந்தடையும்.
கொல்கத்தாவில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் முறையே மதியம் 3:55 மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.
இந்த ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் அனைத்து பயணிகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் தட்கல் முன்பதிவு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.