தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Update: 2022-08-07 04:43 GMT

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதியாக வலுப்பெறும். இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் மழை பெறும். மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யும்

இந்த புதிய காற்றழுத்த தாழ்வினால் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழை பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்