சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி

சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Update: 2022-06-02 12:19 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் தற்போது குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்