பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 முக்கிய நபர்கள் கைது!

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தலைமறைவான 2 முக்கிய நபர்களை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.

Update: 2022-09-16 07:52 GMT

சண்டிகர்,

பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது.

ஓட்டுனர் இருக்கையில் சரிந்த நிலையில் காணப்பட்ட மூஸ்வாலா மீது கொலையாளிகள் 30 ரவுண்டுகளுக்கு மேல் துப்பாக்கி குண்டுகளால் கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி திகார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் தனது கூட்டாளிகளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர்களை அடுத்த 6 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இந்த வழக்கில் 23வது குற்றவாளியை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தலைமறைவான ஜக்கு பகவான்புரியா கும்பலைச் சேர்ந்த 2 முக்கிய உறுப்பினர்களை(மன்தீப் மற்றும் மன்பிரீத்) பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்