வெள்ளம் பாதித்த பகுதிகளில் சித்தராமையா சுற்றுப்பயணம்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சித்தராமையா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருகிற 19-ந் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவித்துள்ளார். 19-ந் தேதி குடகு மாவட்டத்திலும், 20-ந் தேதி தட்சிண கன்னடாவிலும், 21-ந் தேதி உடுப்பியிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க உள்ளார்.