சித்தராமையாவுக்கு தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாது- மந்திரி சுதாகர் பதிலடி

சித்தராமையாவுக்கு தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாது என்று மந்திரி சுதாகர் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-09-25 22:16 GMT

பெங்களூரு: பா.ஜனதா அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் முதல்-மந்திரி புகைப்படத்துடன் கூடிய 'பே-சி.எம்.' போஸ்டர்களை ஒட்டி பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதுபோன்று, சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது, பசவராஜ் பொம்மைக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது, நான் ஒரு வக்கீல், எனக்கு சட்டம் தெரியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்படவும் 40 சதவீத கமிஷன் அரசே காரணம் என்று சித்தராமையா கூறி இருந்தார். இதுபற்றி பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சித்தராமையா சட்டம் படித்துள்ளார். அவருக்கு தொழில்நுட்பம் பற்றி எதுவும் தெரியாது. தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பற்றி தெரிய வேண்டும் என்றால், என்ஜினீயர்களிடம் கேட்டு சித்தராமையா அறிந்து கொள்ளலாம். தற்போது சித்தராமையாவுக்கு தொழில் நுட்பம் பற்றி எதுவும் தெரியாமல், ஆம்புலன்ஸ் சேவை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்