தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக சித்தராமையா செயல்படுகிறார்; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு

தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக சித்தராமையா செயல்படுகிறார் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2022-08-20 15:08 GMT

உப்பள்ளி;


உப்பள்ளியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு, அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை பா.ஜனதாவினர் கொண்டாடுவதாக சித்தராமையா கூறி வருகிறார். நாாங்கள் எப்போதும் கோட்சேவை கொண்டாடவில்லை.

இதுபோன்ற பொய் பிரசாரங்களை செய்து, காங்கிரசை வெற்றி பெற செய்து, தான் மீண்டும் முதல்-மந்திரி ஆகிவிடலாம் என சித்தராமையா கனவு காண்கிறார். அவர் கனவு காணட்டும். சித்தராமையாவுக்கு கனவு காணும் அதிகாரம் உள்ளது. சித்தராமையா வாக்கு வங்கி அரசியல் செய்கிறார். தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக சித்தராமையா செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்