ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை

டெல்லியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா திடீரென்று ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-05-16 14:50 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் பனிப்போர் நீடித்து வருகிறது. இருவரும் முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் எனறு ேபார்க்ெகாடி தூக்கியுள்ளனர். இது அக்கட்சி மேலிடத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் துணை முதல்-மந்திரி பதவிகள், மந்திரி பதவிகள் கேட்டும் காங்கிரசில் பலரும் கோதாவில் குதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா நேற்று முன்தினம் மதியமே டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ஜமீர் அகமதுகான், எம்.பி.பட்டீல், பைரதி சுரேஷ், அனில் சிக்கமாது, ேக.ேஜ.ஜார்ஜ், மகன் யதீந்திரா ஆகியோருடன் அங்கு முகாமிட்டு, மேலிட தலைவர்களிடம் தனக்கு முதல்-மந்திரி வழங்க அழுத்தம் கொடுத்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டெல்லியில் தங்கிய சித்தராமையா, தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களுடன் அங்குள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டார். முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருவதால், இந்த நேரத்தில் எந்த கருத்தையும் சித்தராமையா கூறவில்லை என்றும், பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஆதரவாளர்களிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்