சரத் பாபுவின் மறைவால் வேதனை அடைந்தேன்: பிரதமர் மோடி இரங்கல்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சரத் பாபு இன்று காலமானார்.

Update: 2023-05-22 14:11 GMT

புதுடெல்லி,

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சரத் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரத் பாபு மறைவிற்கு திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது:- சரத் பாபுவின் மறைவால் வேதனை அடந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பலதுறைகளிலும் படைப்பாற்றல் மிக்க நடிகராக விளங்கினார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்