மராட்டியத்தில் அதிர்ச்சி; ஒரே வீட்டில் 9 பேர் மர்ம மரணம்
மராட்டியத்தில் ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளனர்.
சங்கிலி,
மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்தில் ஹைசால் என்ற பகுதியில் வீடு ஒன்று உள்ளது. இதில், ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 9 பேர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
சம்பவம் பற்றி சங்கிலி போலீஸ் சூப்பிரெண்டு தீட்சித் கெடம் கூறும்போது, ஒரு வீட்டில் 9 பேரின் உடல்கள் கிடந்துள்ளன. 3 உடல்கள் ஓரிடத்திலும், 6 உடல்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கிடந்துள்ளன. இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
அவர்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என மற்றொரு காவல் அதிகாரி சந்தேகம் தெரிவித்து உள்ளார். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சரியான காரணம் தெரியவரும். ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.