சாபா சூறாவளி புயலில் சிக்கி இரண்டாக உடைந்த கப்பல்; 27 பேரை மீட்கும் பணி தீவிரம்

சாபா சூறாவளி புயலில் சிக்கி இரண்டாக உடைந்த கப்பலில் இருந்து காணாமல் போன 27 பேரை மீட்கும் பணியில் ஹாங்காங் மீட்பு குழுவினர் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-07-03 10:26 GMT

கோப்பு படம்



ஹாங்காங்,



தெற்கு சீன கடல் பகுதியில் உருவான சாபா சூறாவளி புயல் பாதிப்பில் கப்பல் ஒன்று சிக்கி விடாமல் தவிர்க்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் கப்பல் இரண்டாக உடைந்தது. இதில், கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் நேற்று மதியம் 3 பேர் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 27 பேர் கடலுக்குள் விழுந்தனர். அவர்களை காணவில்லை. கப்பலும் மூழ்க தொடங்கியது.

இந்நிலையில், புயல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கரையை கடந்தது. இதனை தொடர்ந்து காணாமல் போன 27 பேரை மீட்கும் பணியில் ஹாங்காங் அரசின் மீட்பு குழு சென்றுள்ளது. கப்பலானது தென்மேற்கு தீவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மூழ்கியுள்ளது என குழு தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு பணியில், 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியை தொடர்ந்து வருகின்றனர். புயலால் உடைந்த கப்பலில் இருந்து காணாமல் போன 27 பேரை தேடும் பணி யாங்சியாங் நகர் பகுதிக்கு அருகே நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்