ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை - சாலையில் குதித்த இளம்பெண்...!
ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நிலையில் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்பொழுது அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். உடனே அங்கிருந்த சிலர் சாலையில் கிடந்த அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சையது அக்பர் ஹமீதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பெண் சாலையில் குதித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.