பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்பட்ச மழைப்பொழிவு; வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலைகள்

பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்பட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

Update: 2022-09-05 04:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்பட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ல் பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களும் நகரில் 6 முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்