மணிப்பூர் கலவரம்: அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து விட்டு அமித்ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Update: 2023-06-18 10:15 GMT

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், அமித் ஷாவை விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பாஜக மணிப்பூர் அரசை பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை திணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள். அவர் தனது மகனை பிசிசிஐயில் கவனித்துக் கொள்ள ஆர்வமாக உள்ளார். என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்