டெல்லியில் அழகு சாதன பொருட்களின் காலாவதி தேதியை மாற்றி விற்பனை - இருவர் கைது
அழகு சாதன பொருட்களின் காலாவதி தேதியை மாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஒரு பிரிண்டிங் மையத்தில் அழகுசாதன பொருட்கள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களின் காலாவதி மாற்றப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி மேற்கு மோதிபாக் பகுதியில் உள்ள ஒரு பிரிண்டிங் மையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, அங்கு காலாவதியான அழகுசாதன பொருட்கள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களில் அச்சிடப்பட்டுள்ள தேதியை மாற்றம் செய்து அவற்றை மீண்டும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், அச்சு இயந்திரங்களையும், தேதி மாற்றப்பட்ட அழகு சாதன பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.