எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி தேர்வு

எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-14 20:45 GMT

பெங்களூரு:-

காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சொந்த மாநிலம் என்பதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீவிர பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்ததால் நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்களின் கருத்து...

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று (நேற்று) மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தை நடத்த கட்சியின் மேலிட பார்வையாளர்கள் 3 பேரை பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளோம். முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் புதிய எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்பார்கள். அவர்கள் அந்த கருத்துகள் அடங்கிய அறிக்கையை கட்சி தலைமையிடம் தாக்கல் செய்வார்கள். அந்த கருத்துகளின் அடிப்படையில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து கட்சி முன்னணி தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்