உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் சிக்கியது

பெங்களூருவில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் சிக்கி உள்ளது.

Update: 2023-04-04 21:32 GMT

பெங்களூரு:

பெங்களூருவில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ கோடி தங்கம், வெள்ளி பொருட்கள் சிக்கி உள்ளது.

நடத்தை விதிகள்

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு எடுத்து செல்லப்படும் பரிசுப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இதுவரை பெங்களூருவில் மட்டும் ரூ.55 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு அல்சூர் ஏரிப்பகுதியில் தேர்தல் அதகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அதை அவர்கள் வழிமறித்தனர். மேலும் அதில் சோதனை நடத்தினர். அப்போது தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட பொருட்கள் இருந்தன.

3 பேர் கைது

இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பங்கஜ்கவுடா, பகவ்சாப் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்