வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கர்நாடகத்தில் போராட்டம்

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கர்நாடகத்தில் வருகிற 5-ந்தேதி போராட்டம் நடத்துவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனா்.

Update: 2023-09-02 18:45 GMT

மைசூரு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. இதனால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதன்காரணமாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி கர்நாடகத்தில் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க மாநில தலைவர் படகலபுரா நாகேந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைசூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடகத்தில் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யவில்லை. அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வருகிற 5-ந்தேதி மாநிலம் முழுவதும் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்