பஸ்சில் நடிகை முன்பு ஆபாச சைகையில் ஈடுபட்ட நபர்: ஜாமினில் வெளியே வந்தவருக்கு மாலை போட்டு மரியாதை...!
கேரளாவில் பஸ்ஸில் நடிகையிடம் ஆபாச சைகையில் நடந்து கொண்ட நபர் ஜாமினில் வெளியே வந்த போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக பிரபல நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா சங்கரா அரசு பஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே தாடி வைத்திருந்த இளைஞர் சவாத் ஷா அமர்ந்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் சவாத், நந்திதாவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் நடித்த படங்களை பார்த்திருப்பதாகவும் நன்றாக நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த நபர் திடீரென நந்தினாவின் கை மீது உரசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்திதா நெளிந்தபடியே தள்ளி உட்கார்ந்தார். அப்போது அந்த இளைஞர் மறு கைகளால் பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகையில் ஈடுபட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்திதா, உடனே செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதனால் உஷாரான அந்த இளைஞர் நைசாக ஜிப்பை மூடிவிட்டார்.
இதையடுத்து நந்திதா அந்த இளைஞர் குறித்து பஸ், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் புகார் தெரிவித்தார். அப்போது நடத்துநர் அந்த இளைஞரிடம் விசாரித்த போது தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் தான் ஜிப்பை திறக்கவில்லை என கூறி மூடியிருந்த பேண்ட் ஜிப்பை காண்பித்தார். இதையடுத்து அந்த பஸ் நின்றது. உடனே அந்த இளைஞர் இறங்கினார்.
அவரை பிடித்த நடத்துநர் போலீசில் ஒப்படைக்க முற்பட்டார். அப்போது அவரை தள்ளிவிட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பியோடினார். இருந்தாலும் விடாபிடியாக ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து போய் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் முதலில் தான் எதையும் செய்யவில்லை என அந்த இளைஞர் தெரிவித்தார்.
ஆனால் போலீஸாரின் தீவிர விசாரணையில் அந்த நடிகை அழகாக இருந்ததால் அப்படி செய்தேன் என ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நந்திதா கூறுகையில் பெண்களுக்கு எதிரான இது போன்ற பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நான் நடத்துநர், ஓட்டுநரிடம் தெரிவித்தவுடன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அந்த இளைஞரை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர் என்றார்.
இந்தநிலையில்,. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சாவத் நேற்று பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு ஜாமினில் வெளியே வந்த அவருக்கு கேரளாவில் இளைஞர்கள் குழு ஒன்று பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது.
அவருக்கு ஜெயிலுக்கு வெளியே மாலை அணிவித்து மரியாதையை கொடுத்து வரவேற்றது. அவர் வெளியே வரும் போது கைதட்டி, அவருக்கு மாலை போட்ட சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.