தேசிய கொடி விற்பனைக்கு ஜி.எஸ்.டி. விலக்கு
பாலியஸ்டர் அல்லது எந்திரத்தால் உருவாக்கப்பட்ட தேசிய கொடி விற்பனைக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தற்போது, பருத்தி, பட்டு, கம்பளி, கதர் ஆகியவற்றை பயன்படுத்தி, கையால் நூற்கப்பட்ட இந்திய தேசிய கொடிகளின் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. இந்தநிலையில், பாலியஸ்டர் அல்லது எந்திரத்தால் உருவாக்கப்பட்ட தேசிய கொடி விற்பனைக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கொடி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம், இந்த விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகம் தெரிவித்துள்ளது.