சன்சத் கேல் மகாகும்ப் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சன்சத் கேல் மகாகும்ப் 2022-23ன் நாடாளுமன்ற விளையாட்டை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-18 14:43 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பஸ்தியில் நடைபெறும், 2022-23 ஆம் ஆண்டிற்கான, சன்சாத் கேல் மஹாகும்பின் இரண்டாம் கட்டத்தை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். சன்சாத் கேல் மஹாகும்பம் 2021 முதல் பஸ்தி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

சன்சாத் கேல் மஹாகும்பம் 2022-23, இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் டிசம்பர் 10 முதல் 16, 2022 வரை நடைபெற்றது. கபடி, கூடைப்பந்து, சதுரங்கம், மல்யுத்தம், கோ-கோ ஓவியம், கட்டுரை உட்பட பல உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் கேல் மஹாகும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,

சான்சத் கேல் மூலம் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு, வெளிநாடுகளில் கலந்து கொண்டு விளையாடும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவார்கள் என்று கூறினார். மேலும் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக 40,000 விளையாட்டு வீரர்கள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கின்றனர் என்று மோடி மேலும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்