காளஹஸ்தி கோவிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம்..!

அந்திரா மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-17 06:44 GMT

காளஹஸ்தி,

சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவார தளமாகும். இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.

இந்நிலையில் காளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவிலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செல்போன் எடுத்து வென்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்