அரசு பஸ்களில் 'ஓசி'யில் பயணித்தோரிடம் இருந்து ரூ.5¾ லட்சம் அபராதம் வசூல்

கடந்த ஜனவரி மாதத்தில் அரசு பஸ்களில் ‘ஓசி’யில் பயணித்தோரிடம் இருந்து ரூ.5¾ லட்சம் அபராதம் வசூலாகியிருப்பதாக கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-02-14 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கர்நாடகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் பஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பஸ்சில் பயணிப்பவர்கள் முறையாக டிக்கெட் எடுக்காமல் செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 46 ஆயிரம் பஸ்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஜனவரி மாதம் 46 ஆயிரத்து 47 பஸ்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணித்ததாக 3 ஆயிரத்து 682 பேரிடம் இருந்து ரூ.5¾ லட்சத்தை அபராதமாக வசூலித்தனர். மேலும், பஸ்சில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக 3 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஸ்சில் பயணிக்கும் போது முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்