ரூ.10 லட்சம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
சிக்கமகளூருவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீர் மையத்தை சி.டி.ரவி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு நகரசபைக்கு உட்பட்ட 21-வது வார்ட்டில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தை சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா பொதுச்செயலாளருமான சி.டி.ரவி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் ஆசாத்பூங்காவில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தார் சாலைகள் அமைக்கும் பணியை பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதையடுத்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- சிக்கமகளூருவில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுத்தமான குடிநீர் வழக்கப்படும். இதுகுறித்து மாநில அரசிடம் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதேபோல ஆசாத் பூங்காவில் ரூ.38 லட்சம் செலவில் நடைபாதைகள் மற்றும இரும்பால் ஆன கம்பிகள் போடப்படும். மேலும் இந்த பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.