ரூ.1¼ கோடி நகைகள், வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சிக்கமகளூருவில் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடி நகைகள், வாகனங்கள் மீட்ட போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூருவில் கொரோனா இந்த ஆண்டு திருட்டு, கொள்ளை வழக்கில் தொடர்புடையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் உரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி என 363 வழக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 127 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 600 மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.39 லட்சத்து 18 ஆயிரத்து 585 மதிப்பிலான பொருட்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (நேற்று) நடந்தது. இதில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 189 செல்போன்கள், 70 மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்வு காணவேண்டிய வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்