தொழில்அதிபரை நிர்வாணப்படுத்தி ரூ.50 லட்சம் பறிப்பு- 5 பேர் கைது

தொழில்அதிபரை நிர்வாணப்படுத்தி ரூ.50 லட்சம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-17 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் வசித்து வருபவர் வசந்த் சிவரெட்டி. இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் வசந்த் தனது நண்பரான ஹரீஷ் என்பவருடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று பேசி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த கும்பல் வசந்த், ஹரீசை கத்தியை காட்டி மிரட்டி ஐதராபாத்திற்கு கடத்தி சென்றது. அங்கு சென்றதும் வசந்த்தை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த கும்பல் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. பணம் தராவிட்டால் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. இதையடுத்து பணத்தை எடுத்து வருவதற்காக ஹரீசை அந்த கும்பல் விடுவித்து இருந்தது.

அவர் பெங்களூருவுக்கு வந்து ரூ.11 லட்சத்தை எடுத்து கொண்டு சென்று கடத்தல் கும்பலிடம் கொடுத்தார். பின்னர் வசந்த்தும், ஹரீசும் விடுவிக்கப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்த புகாரின்பேரில் பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தை சேர்ந்த பிரசாத், மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த், நாகுராவ், கிரண், பானுதாஸ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்